தீபாவளிப் பண்டிகையையொட்டி,இனிப்பு கார வகை கடைகளில் உணவுப் பொருள் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறுதயாரிக்கப்படும் உணவுகள் பாது காப்பாகவும், சுத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் நேற்று அனைத்து இனிப்பு கார வகை மற்றும் பேக்கரிகளில் ஆய்வு மேற் கொண்டார். உணவுப் பொருள் தயாரிப்பின் போது கடைபிடிக்க வேண்டியது குறித்த கையேட்டை வழங்கினார்.
அதன்படி கடையின் பதிவு மற்றும் உரிமச் சான்றிதழ்களின் உண்மை நகல் கட்டிடத்தின் பிரதான பார்வையில் வைக்கப் படவேண்டும், உணவுப் பொருள் போதிய வெளிச்சத்துடனும், காற் றோட்ட வசதியுள்ள வகையில் இருத்தல் அவசியம். தினமும் தரமான கிருமிநாசினி, பூச்சிக் கொல்லிமருந்து பயன்படுத்தி சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருள் தயாரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும். கடைகளில் பணியாற்றுவோர் கையுறை, மேலங்கிகள், தலைக் கவசம் மற்றும் வாய்மூடி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் உள் ளிட்ட அறிவுரைகள் அடங்கிய கையேட்டை விநியோகித்தனர்.
கடைகளில் பணியாற்று வோர் வாய்மூடி அணிந்திருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago