கடலூர் மாவட்டம் காடாம்புலியூ ரைச் சேர்ந்தவர் முந்திரி வியா பாரி செல்வமுருகன் (39). பெண் ணிடம் நகை பறித்த வழக்கில் செல்வமுருகனை, கடந்த மாதம் 30-ம் தேதி கைது செய்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
உடல்நலக் குறைவால் விருத்தா சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது மனைவி பிரேமா, தனது கணவர்செல்வமுருகனை போலீஸார்அடித்து சித்ரவதை செய்ததால் தான் உயிரிழந்துள்ளார். சம்பந்தப் பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் புகார் மனு அளித்துள்ளார். அவ ருக்கு ஆதரவாக பல்வேறு அரசி யல் கட்சியினர், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று அறிக்கை விடுத்தனர்.
தற்போது இந்த வழக்கு விசா ரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. கடலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீஸார், நெய் வேலி டவுன்ஷிப் காவல்நிலையம் சென்று நேற்று விசாரணையை தொடங்கினர். விருத்தாசலம் கிளைச் சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago