பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை மேற்குஒன்றியத்திற்குட்பட்ட வில்லியநல்லூர், சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு, சின்னாண்டி குழி, புதுச்சத்திரம் ஊராட்சிகளில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கிவைத்தார். 4 ஊராட்சிகளில் அமைந்துள்ள 10 வாக்குசாவடிகளுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் அவர் தொடக்கி வைத்து, அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago