படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக் கிளை பேரவைக் கூட்டம் வில்லிபுத்தூரில் நடைபெற்றது. தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பொன்ராஜ் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாலமுருகன் தொடக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு அரசுத் துறை ஓய்வு சங்க மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, அரசு ஊழியர் சங்க இணைச் செயலாளர் வெள்ளையப்பன், பட்டு வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத் தலைவர் குருசாமி வாழ்த்துரையாற்றினர். மாவட்டச் செயலாளர் கருப்பையா நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெய்வராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியனை ஓய்வு நாளில் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததை ரத்து செய்வது, அனைத்து நகராட்சி ஊழியர்களுக்கும் கருவூலம் மூலம் ஊதியம், இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்யக்கோருவது உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago