திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு நாள் மழைக்கே தாங்காத கிராமப்புறச் சாலைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு நாளில் பெய்த மழைக்கே கிராமப்புறச் சாலைகளில் நீர் நிரம்பியதால் பைக்கில் செல்வோர் சிரமத்துக்குள்ளாகினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. கிராமப் புறங்களில் உள்ள சாலைகள் பெரும்பாலும் குண்டும் குழியு மாக இருப்பதால் ஒரு நாள் பெய்த மழைக்கே சாலைகளில் ஆங்காங்கே நீர் நிரம்பி வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் பாதிப்புக்குள்ளாகினர்.

மழைக்காலம் தொடங்கும் முன்பே சாலைகளைச் சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நத்தம் அருகே மாமரத்துப்பட்டியில் இருந்து அய்யலூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. ஒருநாள் மழைக்கே இந்தச் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகனங்களில் செல் வோர் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் சென்று வருவோர் மிகவும் சிரமப்பட்டனர்.

சிலர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கினர்.

இதனால், பொதுமக்கள் அர சின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தற்காலிகமாகச் சீரமைக்க வலி யுறுத்தி சாலையில் நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்துகளைத் தவிர்க்க மழை முடிந்த பிறகாவது சாலைகளைப் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்