தீபாவளிப் பண்டிகையை யொட்டி இனிப்பு, காரம் மற்றும் பலகாரவகைகள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகையை யொட்டி பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், உணவகங்கள், இனிப்பு மற்றும் கார திண்பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், பண்டிகை காலத்தில் மட்டும் இனிப்பு, காரம் மற்றும் பலகாரவகைகள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இல்லாதவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு பொருட்களை தயாரிப்பதோ, விற்பதோ சட்டப் படி குற்றமாகும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago