கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவு மான வி.செந்தில்பாலாஜி கரூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் 1,031 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு நிரந்தர முகவரியில் வசிக்கக்கூடிய, தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்க ளிக்கக்கூடிய வாக்காளர்களில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்குவதற்காக, வாக்கா ளர் பட்டியலில் உள்ள தொடர் எண்ணை குறிப்பிட்டு, ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர். அதன்படி, ஆட்சியர் கள ஆய்வு செய்து வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில், ஒரே முகவரியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் திமுக முன்னாள் கவுன்சிலர் வழக்கறிஞர் மணிராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேபோல, ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் 25,000 பேரை நீக்கி விட்டு, வேறு தொகுதியில் இருந்து 10,000 பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
கரூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி யாற்றும் வேறு தொகுதியைச் சேர்ந்த 20 நபர்களை தொழிற் சாலை முகவரியில் வசிப்பதாகக் காட்டி, புதிய வாக்காளர்களாக சேர்த்துள்ளனர். நேர்மையாக வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அதிமுகவினர், குறுக்கு வழியில் இதுபோன்ற யுக்தியை கையாண்டு வருகின்றனர்.
வாக்குச்சாவடி முகவர்களை வைத்துதான் கள ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டும், இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறுகின்றன. இதை நிறுத்தாவிட்டால், சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்போம் என்றார்.
முன்னதாக, கரூர் மாவட்டத்தில் திமுக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி நேற்று முன்தினம் மனு அளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago