விராலிமலை தொகுதியில் கண் பரிசோதனை முகாம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி, மூக்குக் கண்ணாடி வழங்கப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை மற்றும் இலுப்பூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று 163 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அவர் கூறியது:

தீபாவளி பண்டிகை முடிந்தவு டன் விராலிமலை தொகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி, தேவையானோருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட் டம் தெற்கு வெள்ளாறு வரை பணி மேற்கொள்ள ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் கால்வாய் வெட்டும் பணியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.

இதைத்தொடர்ந்து புதுக் கோட்டை ராஜகோபாலபுரம், தொண்டைமான் நகர், அடப்பன்வயல், பிருந்தாவனம், வடக்கு 4-ம் வீதி, காமராஜபுரம், மரக்கடை வீதி, அன்னசத்திரம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக சார்பில் 2-ம் கட்டமாக கரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இவ்விடங்களுக்கு ஸ்கூட்டரி லேயே சென்று நிவாரண பொருட்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.

அப்போது, தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றது விமர்சனத்துக்கு உள்ளா னது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்