பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் வாரந்தோறும் வட்ட அளவில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமைகளில் நடைபெறும் என ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (நவ.9) முதல் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் வட்ட அளவில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படும் என ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி இன்று(நவ.9) முதல் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்ட அளவிலான மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணி முதல் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ந.சக்திவேல் தலைமையிலும், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் சி.கிறிஸ்டி தலைமையிலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

இதேபோல, ஆலத்தூர் வட்டாட் சியர் அலுவலகத்தில் கலால் பிரிவு உதவி ஆணையர் அ.ஷோபா தலைமையிலும், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.ரமணகோபால் தலைமையிலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இக் கூட்டங்களில், பொது மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பாதுகாப்பான முறையில் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்