வேலூர் பென்கள் தனிச்சிறையில் சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆய்வு மேற்ண்டார்.
வேலூர் ஆப்காவில் துணை கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்களுக்கான 9 மாத கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றி தழ்களை வழங்கிப் பாராட்டினார்.
பிறகு, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறைத்துறை பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதன்பிறகு, சிறைத்துறையில் பணியாற்றி வரும் சிறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், வேலூர் சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜெயபாரதி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண் டாள், வேலூர் அரசுகுழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் கண்காணிப்பாளர் உமா மகேஷ்வரி, சிறைத் துறை மண் டல நன்னடத்தை அலுவலர் ஹாஜா கமாலுதீன், நன்னடத்தை அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தினர் சிறைத்துறை டிஜிபியை சந்தித்துப்பேசினர். அப்போது, வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தினரின் குறைகளை கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த சிறைவாசிகளுக்கு, முன்னாள் சிறைவாசி கள் ஆதரவு சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து அறிக்கையாக சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தினர் வழங்கினர். நிகழ்ச்சியில், முன் னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத் தலைவர் விஜயராகவலு, சங்கத்தின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் சீனி வாசன் ஆகியோர் சிறைத் துறை டிஜிபி சுனில் குமார் சிங்குக்கு சால்வை அணிவித்து கவுர வித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago