நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். நடப்பாண்டில் கரும்பு அரவை வையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பாக தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கேத் தாண்டப்பட்டி பகுதியில் திருப்பத் தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்நிறுவனத் தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த 8 மாதங்களாக சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கரும்பு அரவை நடை பெறாது என சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்ததாக தெரி கிறது. இதைக்கண்டித்தும், கூட்டு றவு சர்க்கரை ஆலையின் அனைத்துக்கட்சி தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கூறும்போது, "திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப் படவில்லை. கரோனா ஊரடங்கை காரணம் காட்டி சம்பளத்தை வழங்காமல் ஆலை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவது வருத்த மளிக்கிறது. எனவே, நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
அதேபோல, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கரும்பு அரவை நடக்காது என தொழிற்சாலை நிர்வாகம் கூறி வருவதை ஏற்க முடியாது. கரும்பு வரத்து குறைவாக இருப்பதாகக் கூறி, இங்கிருந்து தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் அரவைக்கு அனுப்பப்படுகிறது. அதனை தவிர்க்க வேண்டும்.
குறைந்த அளவிலான கரும்பு கள் வந்தாலும், இங்கேயே அரவையை தொடங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி யும் செயற்கையான தட்டுப் பாட்டை உருவாக்கி ஆலையில் கரும்பு அரவையை ஆண்டு தோறும் நிறுத்துகின்றனர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
மேலும், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டுமின்றி ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை யிலும் இதேநிலை நீடிக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நடப்பாண்டில் கரும்பு அரவையை தொடங்க வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago