திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே தார் தொழிற்சாலைக்கான கட்டு மானப்பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் நேற்று முற்றுகை யிட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னகந்திலி ஊராட்சியை யொட்டி திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதியான தெல்லபெண்டா பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் தார் தொழிற்சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இத்தொழிற்சாலை இப் பகுதியில் அமைந்தால் சுற்றுச் சூழல் மாசு, நிலத்தடி நீர் மாசு, சாலை போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழும் என்பதையறிந்த திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தார் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகைப்போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கந்திலி காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்