செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து செங்கல்பட்டு, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 120 ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில், மைதா போன்ற ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கிருந்து லாரிகளில் ரேஷன் பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகளில் 24 தற்காலிக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்பட்டது. தற்போது 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது.
தீபாவளி போனஸை 25 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்’ எனக் கூறி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் பணிகள் பாதிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago