சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி 2,369 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26,036 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று வெளிவந்த பரிசோதனை முடிவுகளில் 85 பேருக்கு கரோனாதொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26,121 ஆக உயர்ந்தது. இவர்களில் 25,307 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 403 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 44,617 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் 112 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 44,712 ஆக உயர்ந்தது. இவர்களில் 43,098 பேர் சிகிச்சை முடிந்துவீடு திரும்பிவிட்டனர். 693 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன் தினம்வரை 38,632 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெளிவந்த பரிசோதனை முடிவுகளில் 137 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,769 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37,127 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நேற்று மட்டும் 120 பேர் வீடு திரும்பியுள்ளனர். 630 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago