20 சதவீத போனஸ் வழங்கக்கோரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

கடலூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ்வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

கடலூரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள், கடந்த ஆண்டுவழங்கியதுபோல் 20 சதவீதபோனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நேற்றுகாலை கடலூர் செம்மண்ட லத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சந்திரபாலன், அன்புராஜ், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கரோனா காலத்திலும் ஓய்வின்றி பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.

கோரிக்கைகள் நிறைவேற் றப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.

கடலூர் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்