டெக்ஸ்வேலியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச்சந்தையில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.

ஈரோடு கங்காபுரம் நான்குவழிச்சாலை பகுதியில் டெக்ஸ்வேலி ஒருங்கிணைந்த ஜவுளிச்சந்தை வளாகம் அமைந்துள்ளது. இங்கு செயல்படும் 1000 வாராந்தரக் கடைகள் மற்றும் 500 தினசரிக்கடைகளில் அனைத்து வகையான ஜவுளி வகைகளும் உற்பத்தியாளர்களால் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. டெக்ஸ்வேலி ஜவுளி வளாகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக டெக்ஸ்வேலி ஜவுளி வளாக நிர்வாகிகள் கூறியதாவது:

டெக்ஸ்வேலி ஜவுளிச்சந்தை யில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பிரிவினருக்குமான ஆடைவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் அனைத்து வகையான ஜவுளி வகைகளும் கிடைப்பதால், பல்வேறு அலுவலகங்கள், தொழிற்சாலைகளைச் சேர்ந்தோர் தங்கள் ஊழியர்களுக்கு மொத்தமாக ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து டெக்ஸ்வேலி ஜவுளிச்சந்தைக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து, விசாலமான கார் நிறுத்துமிட வசதி கொண்ட டெக்ஸ்வேலிக்கு தீபாவளி ஜவுளிக் கொள்முதலுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். வாராந்திர சந்தை பகுதியில் இருந்து, தினசரி சந்தைக்குச் செல்ல இலவசமாக பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி மொத்தமாக ஜவுளி வாங்குவோருக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன, என்றனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்