சேலம் ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில் சேவை மூலம் ஒரே நாளில் ரூ.61.60 லட்சம் வருவாயை ஈட்டியுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சின்னசேலம் ரயில் நிலையத்தில் இருந்து, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கு 5 முறை நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. நேற்று 6-வது முறையாக சின்ன சேலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ஏளூருக்கு 81 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் 32 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.10.40 லட்சம் வருவாய் கிடைத்தது.
இதேபோல, கரூர் ரயில் நிலையத்தில் இருந்து, நேற்று 3-வது முறையாக 2,658 டன் கொசு வலைகள், 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.51.20 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. சரக்கு ரயில் சேவை மூலம் சேலம் ரயில்வே கோட்டம் ஒரே நாளில் ரூ.61.60 வருவாய் ஈட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago