வாழையை தாக்கும் வாடல் நோய் வழிகாட்டுதலுக்கு கோரிக்கை

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைகளில் வாடல் நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதைதடுக்க வேளாண் துறை மூலம் உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேவூர் அடுத்த சென்றாயனூர், சோழக்கவுண்டனூர், மேட்டு பாளையம், பாலிருச்சம் பாளையம், காவேரிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரம் உள்ளிட்ட வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வாழை இலை பழுப்பு மஞ்சள் நிறமாக மாறி கருகி முறிந்து வருகிறது. இதனால், மகசூல் குறையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை அதிகாரிகள் மூலம் வாடல் நோய் தாக்குதலை தடுக்க உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நோய் தாக்குதலுக்கு உள்ளான வாழை கன்றுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்