தீபாவளி பண்டிகையை முன் னிட்டு அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் கிப்ட் பேக் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூரை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி நிறுவனத்துக்கு பெரம்பலூர், சென்னை, திருச்சி, கரூர், ஆத்தூர், நாமக்கல், அரியலூர், துறையூர், புதுச்சேரி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் விற்பனை நிலை யங்கள் உள்ளன. இங்கு தீபாவளி பண்டிகையையொட்டி கிப்ட் பேக்குகளில் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.தட்டை ஒரு பாக்கெட், மிக்சர் 250 கிராம், மிக்சிங் ஸ்வீட் 200 கிராம், அதிரசம் 2 பீஸ், தேன் குழல் முறுக்கு 1 பாக்கெட், உருண்டை 1 பாக்ஸ், கார மினி தட்டை 100 கிராம் ஆகியவை கொண்ட கிப்ட் பாக்ஸ் ரூ.350-க்கும், தட்டை ஒரு பாக்கெட், ஸ்பெஷல் மிக்சர் 250 கிராம், ஸ்பெஷல் மிக்சிங் ஸ்வீட் 500 கிராம், அதிரசம் 4 பீஸ், தேன் குழல் முறுக்கு 250 கிராம், கோதுமை அல்வா 1 பாக்ஸ், உருண்டை 1 பாக்ஸ், கார மினி தட்டை 100 கிராம் ஆகியவை கொண்ட கிப்ட் பேக் ரூ.700 விலையிலும் கிடைக்கும்.
மேலும், ரூ.325, ரூ.625 விலையில் வி.ஐ.பி கிப்ட் பாக்ஸ், ரூ.500 விலையில் ஸ்பெஷல் வி.ஐ.பி கிப்ட் பாக்ஸ் கிடைக்கும். கடைசி கட்ட கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே ஆர்டர்கள் கொடுத்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago