கரூர் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 11,043 விவசாயிகளுக்கு ரூ.117 கோடி பயிர்க்கடன் வழங்கல் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் ரூ.317 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 11,043 விவசாயிகளுக்கு ரூ.117 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மகளிர் திட்டம் உள் ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.2.70 கோடியிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகளின் தொடக்க விழா ஆகியவை நேற்று நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். பின்னர், அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

கரூர் மாவட்டத்தில் நிகழ் நிதி யாண்டில் ரூ.317 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 11,043 விவசாயிகளுக்கு ரூ.117 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.200 கோடி பயிர்க்கடன்கள் வழங்குவதற்கு தொடர் நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதில், மகளிர் திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் ந.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்