திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 172 காவலர்களுக்கான தண்டனை நீக்கம்

திருச்சி சரக காவல்துறையிலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரிய லூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு பல்வேறு காலகட்டங்களில் உயர் அதிகாரிகளால் அளிக்கப்பட்ட தண்டனையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வகையில், அந்த தண்டனையைக் குறைப்பது, நீக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா, 172 காவலர்களுக்கான தண்டனையை முற்றிலும் நீக்கினார். மேலும், பல காவலர்களை அவர்கள் விரும்பிய பணியிடத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எஸ்.பி செந்தில் குமார் (பொ) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்