திரைப்பட துறையினர் நலவாரியத்தில் வரும் 20-ம் தேதி வரை உறுப்பினர் பதிவு நடைபெறும் தி.மலை ஆட்சியர் கந்தசாமி தகவல்

By செய்திப்பிரிவு

திரைப்பட துறையினர் நலவாரி யத்தில் வரும் 20-ம் தேதி வரை உறுப்பினர் பதிவு நடைபெறும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “திரைப்பட துறையினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின் றன.

நீதிமன்றத்தில் சிலர் முறையீடு

இதற்காக, அவர்களுக்கு இலவச அடையாள அட்டை விநியோகிக்கப்படுகிறது. இருப்பி னும், நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் முறையீடு செய்துள்ளதால், உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்

செயலாளர், திரைப்பபட துறை யினர் நலவாரியம், கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை - 02 என்ற முகவரி யில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நாட்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

பூர்த்தி செய்த விண்ணப்பங் களை, மேற்கண்ட அலுவலகத்தில் வரும் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்க்க வேண்டும். 3 ஆண்டுகளை கடந்து புதுப்பிக் காமல் உள்ளவர்கள், தங்களது உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த திரைத்துறையில் பணியாற்றி வரும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர் கள் அனைவரும், திரைப்படதுறையினர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறு மாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்