ஆம்பூரில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

ஆம்பூர் நகரில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.250 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்றுமதி வணிக வழிகாட்டுதல் குழுவின் முதல் கருத்தரங்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை அந்நிய வாணிபம் கூடுதல் இயக்குநர் சண்முகசுந்தரம், கவுன்சில் ஆப் லெதர்ஸ் எக்ஸ்போர்ட் செயல் இயக்குநர் செல்வம் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் வளர்ச்சி குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும் போது, ‘‘இந்தியாவில் தோல் ஏற்று மதியில் 45 சதவீதம் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து செய்யப் படுகிறது. குறிப்பாக, ஆம்பூர், வாணியம்பாடியில் இருந்து அதிக அளவில் வர்த்தகம் நடக்கிறது.

இந்நிலையில், தோல் நிறுவனங் களை ஊக்குவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. வெளிநாட்டினர் அதிகம் தோல் பொருட்களை கொள்முதல் செய்ய திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு கட்டமைப்பு களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆம்பூர் நகரில் தொழில் நிறுவ னங்களின் வளர்ச்சிக்காக ரூ.250 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை களில் சாலை மேம்பாலம் அமைக் கவும், தரமான சாலை வசதிகளை ஏற்படுத்தவும், பாதாள சாக்கடை திட்டத்தை மேம்படுத்தவும், தடை யில்லா மின்சாரம் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு வணிகர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக உலக தரத்தில் வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. தற்போது, இந்தியாவில் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு தோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், கூடுதலாக 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு தோல் பொருட் கள் வெளிநாடுகளுக்கு தேவை உள்ளதாக தெரிகிறது. இந்த இடைவெளியினை நிரப்பிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் தொழிலை ஊக்குவித்து, சுற்றுச்சூழலை பாதுகாத்து தொழிலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகள் தோல்உற்பத்தியிலும், காலணி தயாரிப் பிலும் இந்திய அளவில் முன்னணி யில் உள்ள நகரங்களாகும். இங்குள்ள தொழிற்சாலைகளில் 80 முதல் 90 சதவீதம் பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இது மட்டுமின்றி ஊதுவத்தி உற்பத்தியில் நாட்டிலேயே 2-வது இடத்தில் திருப்பத்தூர் மாவட்டம் திகழ்வது குறிப்பிடத்தக்கது. இத்தொழிலில் அதிக அளவில் பெண்கள் ஈடுபடுகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊதுவத்தி, கயிறு மற்றும் வேளாண் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய தொழில் முனைவோர்களை ஊருவாக்கி அவர்களுக்கு வங்கி கடன் உதவிகளை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இக்கூட்டத்தில், அந்நிய வாணிபம் துணை இயக்குநர் சுகன்யா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, முன்னோடி வங்களின் மேலாளர் ஜெகன்நாதன், பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்