செங்கத்தில் உள்ள எட்டு வழிச் சாலை நில எடுப்பு அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகை யிட்டனர்.
சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் மத்திய, மாநில அரசுகளின் திட்டத் துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவால், நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப் பட்டது. இந்நிலையில், தி.மலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுப் புற பகுதியில், 8 வழிச்சாலைத் திட்டத்துக்காக நிலம் அளவீடு செய்யப்பட்ட பகுதியில் என்னென்ன பயிர்கள் மற்றும் மரங்கள் உள்ளன? என கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மீண்டும் கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாக கூறப்படு கிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, செங்கத்தில் உள்ள நில எடுப்பு அலுவலகத்தை எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும்விவசாயிகள் நேற்று முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், நில எடுப்பு பிரிவு வட்டாட்சியர் சுமதியிடம் விளக்கம் கேட்டனர். அப்போது, எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளபோது, நில அளவீடு செய் யப்பட்ட பகுதியில் கண்கெடுப்பு நடத்துவது தவறு எனக் கூறினர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, "இது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டு விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago