ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஓரிக்கை பகுதியில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கி பணிகளைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தாண்டவராயன் நகர், சின்னையன்குளம், அண்ணா குடியிருப்பு, ஓரிக்கை பிரதான சாலை, குபேரன் நகர், தனசேகரர் தெரு, வேளிங்கப்பட்டரை, அரசமரத் தெரு, விஷ்ணு நகர், முத்தாலம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3.087 கி.மீ தூரத்துக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்த தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆர்.டி.சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்