நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்ததை அடுத்து அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணை முழுக் கொள்ளளவை எட்டியது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ளது மருதாநதி அணை. தென்மேற்குப் பருவமழையால் கணிசமான அளவு நீர்மட்டம் உயர்ந்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து மொத்தக் கொள்ளளவான 74 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி 150 கன அடி நேற்று திறந்துவிடப்பட்டது. அணைக்கு நீர்வரத்தைப் பொறுத்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago