புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவின் ஒப்புதலின்றி, ஊரகப் பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் டி.ெஜயலட்சுமி(அதிமுக), துணைத் தலைவர் டி.உமா மகேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் நேற்று ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியின் 15-வது மத்திய நிதிக் குழுவின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 28 லட்சத்திலும், மாநில நிதிக் குழு சார்பில் ரூ.19 லட்சத்திலும் ஊரக பகுதியில் குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஊராட்சிக் குழுவினர் அனுமதி பெறாமல் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது உள்ளாட்சி சட்டத்துக்கு புறம்பானதாகும்.
எனவே, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிர்வாக அனுமதியை ரத்து செய்துவிட்டு, மாவட்ட ஊராட்சிக் குழுவின் ஒப்புதலோடு தேர்வு செய்யப்படும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago