30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்ட டாஸ்மாக் அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாவட்டத் தலைவர் மதியழகன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் டாஸ்மாக் மேலாளர் ராம்குமாரிடம் மனு அளித்தனர்.
இதே போல, கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமையில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago