தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்பாள்புரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் போலி சிலையை வைத்துவிட்டு பழமையான காலசம்ஹாரமூர்த்தி உலோக சிலை திருடப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொன்மையான இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த உற்சவ மூர்த்தி சிலைகளில் பழமையான காலசம்ஹாரமூர்த்தி உலோகச் சிலை பல ஆண்டுகளுக்கு முன்பாக திருடப்பட்டுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இக்கோயிலின் செயல் அலுவலர் கோ.சுரேஷ், கோயிலில் உள்ள சிலைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என அண்மையில் ஆய்வு செய்தார். அப்போது 24 உற்சவ சிலைகளும், 60 கற்சிலைகளும் சொத்துப் பதிவேட்டின்படி எண்ணிக்கையில் சரியாக இருந்தன. ஆனால், கோயிலில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு ஆய்வு செய்தபோது, பழமையான காலசம்ஹாரமூர்த்தி உற்சவர் உலோக சிலை திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் யு.முத்துராஜா நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago