தேசிய அளவிலான பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை பெற்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மாணவ, மாணவிகளுக்கு ரூ.35 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில், 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம், வெள்ளிப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.1.50 லட்சம், வெண்கலப்பதக்கம் பெற்றவர் களுக்கு ரூ.1 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் என பத்தக்கங்களை குவித்து மொத்தம் ரூ.35 லட்சம் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர்களுக்கான ஊக்கத் தொகைக்கான காசோலையை ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று வழங்கினார்.
இதில், மாணவர்கள் பிரிவில் ஆண்ட்ரே புவனேஷ் சுபாஷ் (தடகளத்தில் தங்கம்), பில்லா (குத்துச்சண்டையில் வெண்கலம்), தர்ஷன் (சாஃப்ட் டென்னிஸில் தங்கம் மற்றும் வெண்கலம்), தென் றல் (சாஃப்ட் டென்னிஸில் தங்கம்), அகஸ்டின் (டென்னிகாய்ட்டில் 2 வெண்கலம்), ராம்குமார் (பளுதூக்குதலில் வெள்ளி) ஆகியோர் ஊக்கத் தொகை பெற்றனர்.
மாணவிகள் பிரிவில் ராக (டென்னிஸில் தங்கம்), யுவ (டென்னிகாய்ட்டில் 2 தங்கம்), தமிழரசி (டென்னிகாய்ட்டில் வெள்ளி), யாமினி (டென்னி காய்ட்டில் வெண்கலம்), சந்தியா (டென்னிகாய்ட்டில் வெண்கலம்), ஹம்ருதா (சாஃப்ட் டென்னிஸில் தங்கம்), ராக (சாஃப்ட் டென்னிஸில் தங்கம்), சரண்யா (சாஃப்ட் டென்னிஸில் வெள்ளி), காவ்யா மற்றும் நித்ய (சாஃப்ட் டென்னிஸில் வெண்கலம்), பிரியங்கா மற்றும் ரித்திகா (பளு தூக்குதலில் வெள்ளி), பூர்ணா, ஜெய், ஹர்ஷினி ஸ்வேதா (பளு தூக்குதலில் வெண்கலம்) ஆகியோர் ஊக்கத் தொகை பெற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago