தண்டராம்பட்டு அருகே குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் கிராம மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் தண்டராம் பட்டு அடுத்த நெடுங்கவாடி கிராமத் தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட் டது. இந்நிலையில் தற்போது, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், “தி.மலை - கண்ணக் கந்தல் சாலையில் உள்ள நெடுங்க வாடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், "தடை இல்லாமல் குடிநீர்வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இதுகுறித்து தகவலறிந்த சாத்தனூர் அணை காவல் துறை யினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விஜயாராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, "குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். இதனை யேற்று, சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago