ஆரணியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்' வைக்க முயன்ற நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வியாபாரிகள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியின் கடைகளுக்கு வாடகை உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வியாபாரி கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சுமார் ரூ.2 கோடி வரை வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்' வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை காந்தி சாலையில் உள்ள கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் ராஜ விஜய காமராஜ் தலைமையிலான குழுவினர், வாடகை செலுத்த வில்லை என கூறி 5-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நேற்று இரவு ‘சீல்' வைக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், காந்தி சாலையில் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையிலான காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்' வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago