திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனத்துக்கு ‘சீல்’ வருவாய் துறையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் கந்திலி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 5 குடிநீர் நிறுவனங்களுக்கு வருவாய்த் துறையினர் நேற்று ‘சீல்' வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாகவும், அனுமதியின்றி குடிநீர் நிறுவனங்கள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அவரது உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் பொதுப்பணித்துறை (நிலத்தடிநீர்) உதவி பொறியாளர் சக்தி மற்றும் குழுவினர் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர். இதில், திருப்பத்தூர் நகரம் திருநாதமுதலி தெரு, செலந்தம்பள்ளி, ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர், பால்நாங்குப்பம், கந்திலி அடுத்த ஆதியூர் ஆகிய இடங்களில் 5 குடிநீர் நிறுவனங்கள் அனுமதி யின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 குடிநீர் நிறுவனங்களுக்கும் வருவாய் துறையினர் நேற்று ‘சீல்' வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்