பொம்மையார்பாளையத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.19 கோடியில் கடலில் நீர்மூழ்கி தடுப்பணை புதிதாக கடற்கரையும் உருவாக்கப்படும்

By செய்திப்பிரிவு

பொம்மையார்பாளையத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.19 கோடியில் நீர்மூழ்கி தடுப்பணை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

ஆரோவில் அருகே பொம்மை யார்பாளையத்தில் கடல் அரிப்பி னால் வீடுகள்,சாலைகள், கட்டிடங்கள் சேதமடைகின்றன.

இக்கிராமத்தினை கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்திட தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டனர். கடலின் உள்ளே சுமார் 250 மீட்டர் தொலைவில் நீர்மூழ்கி தடுப்பணைகள் அமைக்கமீன்வளத்துறைக்கு விரிவான திட்ட அறிக்கையினை சமர்ப்பிக் கப்பட்டது.

இதன் அடிப்படையில் பொம் மையார்பாளையத்தில் 1,350 மீட்டர் நீளம், 3.50 மீட்டர் உயரத்திற்கு 2 அடுக்கு நீர்மூழ்கி தடுப்பணைகள் அமைக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் பொம்மையார்பாளையம் கடல் அரிப்பிலிருந்து முழுவதுமாக பாதுகாக் கப்படும்.

இப்பகுதியில் போதிய அளவு கடற்கரை உருவாகும். இதனால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும். மீன்பிடி தொழில்வளம் பெருகும் மற்றும் மீனவ மக்களின் சமூக பொருளாதார நிலை உயரும்.

மீன்வளத்துறை சார்பில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ்ரூ.19 கோடி மதிப்பில் பொம் மையார்பாளையத்தில், நீர்மூழ்கி தடுப்பணை கட்டுவதற்கு முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அடிக்கல் நாட்டினார்.

இதற்கான கட்டுமான பணி யினை தொடங்க நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இதனை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். ஆட்சியர் அண்ணாதுரை, வானூர் எம்எல்ஏ சக்ரபாணி, மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் நித்தியபிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்