அரசு விதிமுறைகளின்படி மண் அள்ளுவதற்கு தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் எனக் கோரி மணல் லாரி உரிமையாளர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மணல்லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆறு, குளங்களில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மணல் லாரிகள் இயங்காததால் பலர் வேலையிழந்துள்ளனர். எனவே, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு மண் அள்ள தற்காலிக உரிமம் வழங்க வேண்டும். மேலும், சிலர் தடையை மீறி மண் அள்ளி வருகின்றனர். அவர்களுக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago