ஏரி மற்றும் குளங்களுக்கு உபரிநீர் கொண்டு செல்வதற்கான கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்துவது குறித்து விவசாயிகளுடன் கோட்டாட்சியர் கலந்தாய்வு நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல்புதூர் அணைக் கட்டின் வலது மற்றும் இடதுபுறங் களில், புதிய நீர்வழங்கு கால்வாய்கள் அமைத்து கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் வறட்சியான ஏரி மற்றும் குளங்களுக்கு உபரிநீரை நிரப்புவதற்காக கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தை விரைந்து முடித்து கால்வாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.
இந்நிலையில் எண்ணேகொல்புதூர் அணைக்கட்டின் வலது புறத்தில் கால்வாய் அமைய உள்ள பகுதிகளில், இப்பணியை விரைந்து முடிக்கவும்,கரடிஅள்ளி பெரியண்ணன் கொட்டாய் மாரியம்மன் கோயில் வளாகத்தில், நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகப்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் அனுமதி பெற கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் நில எடுப்பு தனி வட்டாட்சியர் சின்னசாமி, காவேரிப்பட்டணம் வருவாய் ஆய்வாளர், கரடிஅள்ளி கிராம உதவியாளர், புல உதவியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago