கிருஷ்ணகிரியில் ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். தலைமையிட செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.

அதில், அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதை திரும்பப்பெற வேண்டும். 10.3.2020 முதல் ஊக்க ஊதியம் திருத்தம் என்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர்களுக்கு 2020-21-ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். மார்ச் 2020 பொதுத்தேர்வில் 11, 12-ம் வகுப்புகளுக்கான அனைத்து வழித்தட அலுவலர், பறக்கும் படை உறுப்பினர்களுக்கான மதிப்பூதியம் உடனடியாக வழங்க வேண்டும்.

மருத்துவப் படிப்பில் மத்திய அரசு தொகுப்பிலிருந்து ஓபிசி (பி.சி., எம்பிசி) மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்