ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர் மூலம் பதிவு செய்யலாம்

By செய்திப்பிரிவு

ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தங்களின் இருப்பை உறுதி செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் வங்கிகள் மற்றும் இ-சேவை மையங்களில் டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பெறுவதற்கு ஓய்வூதியர்கள் நேரில் செல்ல வேண்டும் என்பதால் உயிர்வாழ் சான்று சமர்ப்பிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டது.

இதை தவிர்க்கும் வகையில் அஞ்சல் துறையில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி சார்பில் தபால்காரர்கள், ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே நேரில் சென்ற உயிர்வாழ் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகிய விவரங்களைத் தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், இணைய வழியில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். தபால்காரரை அணுக முடியாதவர்கள் அஞ்சல கங்களுக்கு நேரில் சென்றும் இணையவழி உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியர்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்