தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பணி நியமன முறைகேடுகள் தொடர் பாக ஆளுநர் தலைமையில் உயர்நிலைக் குழுவினர் விசாரிக்க வேண்டும் என ஆய்வுச்சிறகு ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப் பின் தலைவர் எஸ்.சிவக்குமார், துணை பொருளாளர் தென்னன் மெய்ம்மன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறி யது: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் 43 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தகுதி குறைவானவர்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பியதால், எங்களது ஆய்வு பதிவுகளை நீக்கிவிட்டனர். மேலும், பல்கலைக்கழக இணை வேந்தரும், அமைச்சரு மான க.பாண்டியராஜன், அனைத்து பணியிடங்களும் எவ்வித முறைகேடுமின்றி நேர்மை யான, தகுதியானவர்களுக்கு பணியிடம் வழங்கப்பட்டதாக கூறினார்.
ஆனால், கடந்தாண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த பணி நியமனம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே, பல்கலைக்கழகத்தில் முறையற்ற வகையில் செய்யப்பட்டுள்ள பணி நியமனம் தொடர்பாக, தமிழக ஆளுநர் தலைமையிலான உயர்நிலை குழு விசாரணை நடத்தி, முறைகேடாக பணி நியமனம் செய்யப் பட்டவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும், சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago