பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்களுடன் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த ஆலோசனைக் கூட்டம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சவுமியா சுந்தரி தலைமையில் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது
கூட்டத்தில், பெரம்பலூரில் உள்ள உணவகங்கள், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால் மற்றும் தேனீர் விடுதிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் கலந்துகொண்டனர்.
உணவுப் பொருட்களை சுகாதாரத்துடன், தரமாக தயாரிக்க வேண்டும். இனிப்பு, கார வகைகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் சிறு குறு மற்றும் குடிசைத் தொழில் செய்யும் உணவு பொருட்களின் எடை, பயன்படுத்தக்கூடிய தேதிகள், விலை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அடங்கிய குறிப்பை பொருள்கள் அடங்கிய பொட்டலத்தில் பதிவிட வேண்டும். ஆய்வு பணிக்காக கடைக்கு வரும் அலுவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் நகர உணவுப் பாதுகாப்பு அலுவர் சீனிவாசன், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், ரத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago