திறந்தவெளி கழிப்பிடமில்லா நெல்லை பொதுமக்களிடம் கருத்து எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணை யர் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 55 வரை உள்ள வார்டுகளில் வசிக்கும் மக்கள் 100 சதவீதம் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்றும், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும்அனைவரும் தனிநபர் கழிப்பிடம்,சமுதாய கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்றும், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தவில்லை என்றும் மாநக ராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இப்பொருள் தொடர்பாக தங்களது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் 15 நாட்களுக்குள் திருநெல்வேலி மாநகராட்சி ஆணை யரிடம் கடிதம் அல்லதுமின்னஞ்சல் (commr.tirunelveli@tn.gov.in) வாயிலாக தெரிவிக்கலாம் . இவ் வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்