ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழக அரசு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத் தில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
2019-20 நிதியாண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 1,939 பேருக்கு இரு சக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் நகர் புறங்களில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்கள் இந்த திட்டத்தில் பயனடையலாம்.
18 முதல் 45 வயதுக்குள் இருக்கும் பெண்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது சுய தொழில் புரிபவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
பயனாளிகள் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து நேரடியாக அல்லது தபால் மூலமாக அதே அலுவலகங்களில் திருப்பி அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago