ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கக் கோரி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருப்பூரில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமார் நகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சதீஷ் சங்கர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், ஜனதா சங்க மாநில இணை செயலாளர் ஜேம்ஸ் கென்னடி, சிஐடியு மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மின் திட்டங்களில் பணி செய்து வரும் ஊழியர், பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக்கூடாது, துணைமின் நிலைய பராமரிப்புப் பணியை தனியார் வசம்ஒப்படைக்கக்கூடாது, புதிய வேலைவாய்ப்புகளை பறிக்கக் கூடாது,அரசாணை 304-ஐ மின்வாரியத்தில் அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்,மின் ஊழியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி போனஸ் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago