பனியன் குடோனில் தீ விபத்து

By செய்திப்பிரிவு

திருப்பூரில் பனியன் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார். திருப்பூர் 60 அடி சாலையில் பனியன் குடோன் வைத்து நடத்திவருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வேலைகளை முடித்துவிட்டு குடோனை பூட்டிச் சென்றுள்ளார்.

சில மணி நேரங்கள் கழித்து திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அந்நேரத்தில் திடீரென பனியன் குடோனில் தீப்பிடித்தது.

தகவலின்பேரில் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து சேதமடைந்தன. சம்பவம் குறித்து வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

தீயணைப்பு துறையினர்கூறும்போது, ‘‘அருகில் வசிக்கும்பொதுமக்கள் மின்னல் தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் யுபிஎஸ்சிஸ்டத்தில் ஏற்பட்ட கசிவுகாரணமாக தீப்பிடித்திருக்கவும் வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்