ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயில் விவகாரம், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் படும் என நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் திருப்பூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக 11 ஏக்கர் நிலம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளஇக்கோயில் நிலத்தில் 8 ஏக்கர் நிலத்தை, திருப்பூர் மாநகர காவல்துறை முறைப்படி விலைக்கு வாங்கியது. இதில் மாநகர அலுவலகக் கட்டிடம், ஆயுதப்படை வளாகம், காவல்துறை குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு ஆண்டி பாளையம் உட்பட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2-ம் தேதி 2000-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். கோயில் நிலங்கள், கோயில் அல்லாத பிற பயன்பாட்டுக்கு இந்து சமய அறநிலையத் துறை பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.ஆகவே கோயில் நிலம் கோயிலுக்குத்தான் சொந்தம், வேறு பயன்பாட்டுக்கு அனுமதிக்க முடியாது என பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆட்சியர் கூறும்போது,‘‘உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும், விரைவில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதுவரை எந்த நடவடிக்கையும் இருக்காது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago