மின்துறையின் சில பகுதிகளை தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மின் ஊழியர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
செங்கை மாவட்டத்தில் சங்கராபுரம், சமயநல்லூர், சென்னை மின்வாரிய தலைமையகம் ஆகிய 3 இடங்களில் உள்ள துணை மின்நிலையங்களை பராமரிக்க தனியாருக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்த மின்பாதையை பராமரிக்க ஒப்பந்தத்துக்கு விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி திட்டப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனவே இதுபோன்ற நடவடிக் கைகளை கண்டித்து செங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தொமுச மாநில துணைப் பொதுச் செயலர் சர்க்கரை தலைமையில் நேற்று தர்ணா நடைபெற்றது.
தொழிலாளர் சம்மேளத்தின் மாநில தலைவர் வீரராகவன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் பால்ராஜ், பொறியாளர் அமைப்பின் நிர்வாகிகள் முனிவேல், மயில்வாகனன், பொறியாளர் சங்க நிர்வாகி சங்கர், எச்எம்எஸ் நிர்வாகி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காஞ்சி ஒலிமுகமதுபேட்டையில் உள்ள மின்வாரிய மேற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநிலச் செயலர் தர் தலைமை தாங்கினார்.
இப்போராட்டத்தில் துணை மின் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டனர் இதில் பல்வேறு மின் ஊழியர் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். இப் போராட்டம் காரணமாக காஞ்சி, செங்கைமாவட்டங்களில் மின்கட்டணவசூல், புதிய இணைப்பு, பராமரிப்பு பணிகள் போன்றவை தடைபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago