பட்டாசு கடை உரிமம் வழங்க ரூ.15,000 லஞ்சம் ராமநாதபுரம் சார் ஆட்சியரின் ஓட்டுநர் கைதுலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் சார் ஆட்சியரின் ஓட்டுநர் சிங்காரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற்றுத்தர ரூ.15,000 லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் சார் ஆட்சி யரின் ஓட்டுநரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அலவாய்க் கரைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன்(57). இவர் கீழக்கரை அண்ணா நகரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இக்கடையில் தீபாவளி பட்டாசு விற்க தற்காலிக உரிமம் பெற ஆட்சியரின் அறிவிப்பின்படி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பட்டாசு உரிமம் வழங்க வேண்டும். அதற்கு முன்பு வருவாய் கோட்டா ட்சியர், கோட்ட தீயணைப்பு அலுவலர் போன்றோர் பரிந்துரை செய்து சான்றளிக்க வேண்டும். தனசேகரனின் விண்ணப்பத்தை பரிந்துரைக்க ராமநாதபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.10,000 லஞ்சம் கேட்டு பேரம் பேசப்பட்டுள்ளது. அதனால் தனசேகரன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுரையின்படி தனக்கும், கீழக்கரையைச் சேர்ந்த மற்றொரு பட்டாசு வியாபாரி லட்சுமணன் என்பவருக்கும் தலா ரூ.10,000 தருவதாக தன்னிடம் பேரம் பேசிய சார் ஆட்சியரின் ஓட்டுநர் சிங்காரம்(53) என்பவருக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று காலை லட்சுமணனின் ரூ.10,000 மற்றும் தன்னுடைய ரூ.5,000 என மொத்தம் ரூ. 15,000 லஞ்ச பணத்தை சார் ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் வைத்து ஓட்டுநர் சிங்காரத்திடம், தனசேகரன் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் ஓட்டுநர் சிங்காரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதனையடுத்து டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீஸார் ஓட்டுநர் சிங்காரம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். ஓட்டுநர் சிங்காரத்திடம் நடத்திய விசாரணையில், "லஞ்சப் பணத்தை சார் ஆட்சியரின் உதவியாளர் (டபேதார்) செய்யது அப்துல்காதரிடம் வழங்குவேன், அதை அலுவலர்களுக்கு அவர் பிரித்துக் கொடுப்பார் என தெரிவித்துள்ளார். டபேதார் செய்யது அப்துல்காதரிடம் போலீஸார் விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்