கோயில் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோயிலில் தங்கத்தேர் உள்ள அறை, தங்கக்கவசம், வெள்ளிக் கவசம் உள்ள பாதுகாப்பு அறை உள்ளிட்டவற்றை குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நரசிம்மர் கோயிலிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கோயிலின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து காவல் கண் காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.அவற்றை கேட்ட காவல் கண் காணிப்பாளர் சுரேஷ்குமார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆம்புலன்ஸ்சேவை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றை உடனடி யாக ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago