அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் மருத்துவம் பயில இடஒதுக்கீட்டை உறுதி செய்ய கோரிக்கை

By செய்திப்பிரிவு

அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் மருத் துவ படிப்பில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத் தின் பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளது:

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச் எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற முடிவை தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வரவேற்கிறது.

பஞ்சாயத்து பள்ளிகள், ஆரம்ப, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் அரசு பள்ளிக்கூடங்களாகக் கருதப்படும்.

பின் தங்கியவர்களாக இருந்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழே தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தவர்களும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

இந்த இடஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும். இந்த இடஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டியிடலாம் என்றும் அரசு அறிவித்து உள்ளது.

அதேநேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற, பயிலும் மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை பெற முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த, படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிய வழிகாட்டல்கள் இல்லை. மேலும், தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்று, குறிப்பாக இலவச சீருடை, விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்டங்களை பெற்று பயின்ற மாணவர்களையும் அரசுப் பள்ளி மாணவர்களாக கருதி இடஒதுக்கீட்டை பெற உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் தெரிவித்துள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்