தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடியில் பட்டாசு விற்பனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் கூட்டுறவு அங்காடியில் பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு பண்டகசாலையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு பட்டாசு விற்பனை நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டுக் கான பட்டாசு விற்பனை நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டாசு விற்ப னையை தொடங்கி வைத்தார். இது குறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடி சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வேலூர்,குடியாத்தம், திருப்பத்தூர், ஆற்காடு, வாணியம்பாடி மற் றும் காட்பாடி ஆகிய இடங் களில் கூட்டுறவு அங்காடிகளில் பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த ஆண்டு 2.05 கோடிக்கு பட்டாசு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற் போது ரூ.95 லட்சத்துக்கு பட்டாசுகள் வரப்பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் இளைஞர் களை கவரும் வகையில் பட்டாசு ரகங்கள் விற்பனைக் காக கொண்டு வரப் பட்டுள்ளன. இந்த ஆண்டு பிரத்யேக மாக டிக்-டாக் பட்டாசு பாக்ஸ் ரூ.1,976-க்கும், லாலிபாப் பட்டாசு பாக்ஸ் ரூ.1,961-க்கும், கிளாமர் பட்டாசு பாக்ஸ் ரூ.667-க்கும், டிரீட் பாக்ஸ் ரூ.836-க்கும், வின்னர் பட்டாசு பாக்ஸ் ரூ.1,000 என அனைத்து ரகங்களிலும் பட்டாசுகள் விற்பனைக்காக குவிக்கப்பட் டுள்ளன.

ரூ.440 முதல் ரூ.3,400 வரை பட்டாசு கிப்ட் பாக்ஸ் விற்பனைக்காக வந்துள்ளன. வெளிமார்க்கெட்டை காட்டி லும் கூட்டுறவு பண்டகசாலை களில் பட்டாசு விலை குறை வாக விற்பனை செய்யப்படு கின்றன" என்றனர்.

இந்நிகழ்ச்சியில், கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுண ஐயப்பதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்